×

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு

நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் அடுத்த மாதம் 12ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பாக விஜயதசமி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்கு இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆர்எஸ்எஸ்கின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், ‘‘விஜயதசமி விழா, நாக்பூர் ரேஷிம்பாக் மைதானத்தில் அக்டோபர் 12ம் தேதி காலை 7.40 மணிக்கு நடைபெறும். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உரையாற்றுகிறார். இதில் சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் பங்கேற்கிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் முன்னாள் இஸ்ரோ தலைவர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : ISRO ,RSS ,Nagpur ,Nagpur, Maharashtra ,Former ,Radhakrishnan ,
× RELATED ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு ஐகோர்ட்...