×
Saravana Stores

ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் விவசாயிகளின் நிலங்கள் அதிகளவில் அபகரிக்கப்படுவதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இரண்டு குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் குறித்த வீடியோவை அவர் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த அவர், இது நிலஅபகரிப்பு தொடர்பானது என்று குறிப்பிட்டு இருந்தார். அகிலேஷின் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உள்ளூர் போலீசார் இந்த குற்றச்சாட்டு பொய்யானது. இந்த விவகாரம் தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளனர்.

சமாஜ்வாடி கட்சியின் ஊடக பிரிவு, அகிலேஷ் பகிர்ந்த வீடியோ மற்றும் அயோத்தியில் வணிக குழுவின் ஊழியர்கள் மற்றும் விவசாயிகளிடையே ஏற்பட்ட மோதல் குறித்த செய்தி அறிக்கையை இணைத்து பதிவிட்டு இருந்தனர். மேலும் அயோத்தியில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அறிவுறுத்தல்கள்/கூட்டாளிகள்/ பாதுகாப்பு/ வழிகாட்டுதலின் கீழ் பெரும் தொழிலதிபர்கள் தலித்/ பிற்படுத்தப்பட்டவர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்து வருகின்றனர். ராமர் கோயில் தீர்ப்புக்கு பின்னர் அயோத்தி சொத்துக்களை குவிக்கும் பகுதியாக மாறிவிட்டது. பாஜ,முதல்வர் ஆதித்யநாத், பெரும் தொழிலதிபர்கள் கைகழுவ,குளிக்க சரியூ நதிக்கரையோரம் நிலத்தை ஆக்கிரமிக்க விரும்புகிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Ayodhya ,Ram ,Akhilesh Yadav ,Lucknow ,Samajwadi Party ,Uttar Pradesh ,
× RELATED உலக சாதனை படைக்க ஏற்பாடு அயோத்தி ராமர்...