செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த திருவாதூர் ஊராட்சியில் அஞ்சல்துறை சார்பில் விபத்து காப்பீடு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பாரதிபாபு தலைமை தாங்கினார். இதில் அனைவரும் தபால் நிலையம் மூலம் விபத்து காப்பீடு அட்டை பெற்றால் விபத்து ஏற்படும் காலங்களில் காப்பீடு அட்டை மூலம் எவ்வாறு பயன் பெறலாம் என்பது குறித்து அஞ்சல் துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர்.
நிகழ்ச்சியில் பனையூர் பாபு எம்எல்ஏ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். அப்போது, அஞ்சல் துறை மூலம் விபத்து காப்பீடு பெற்ற அதே கிராமத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் (எ) மன்னார் என்பவர் கடந்த 17ம் தேதி சாலை விபத்தில் பலியான நிலையில் அவரது குடும்பத்தினருக்கு அஞ்சல் துறை காப்பீடு மூலம் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை எம்.எல்.ஏ. வழங்கினார்.
The post திருவாதூர் ஊராட்சியில் அஞ்சல் துறை விழிப்புணர்வு முகாம் appeared first on Dinakaran.