இதில் கடும் மனஉளைச்சலுக்கு ஆளான தனலட்சுமி நேற்றிரவு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து தனலட்சுமியின் தாய் முத்துலட்சுமி, தனது உறவினர்களுடன் வந்து கதறி அழுதார். பின்னர் தனது மகளின் சாவில் மர்மம் இருப்பதாகவும், முரளிகிருஷ்ணன், சிவகாமி, ரவிக்குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பொன்னேரி போலீசில் முத்துலட்சுமி புகார் அளித்தார். போலீசார் விரைந்து வந்து தனலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். மேலும், வரதட்சணை கொடுமை புகாரின்பேரில் பொன்னேரி ஆர்டிஓவான சப்-கலெக்டரும் விசாரணை நடத்தி வருகிறார்.
The post பொன்னேரி அருகே திருமணமான 11 மாதத்தில் இளம்பெண் தற்கொலை: ஆர்டிஓ விசாரணை appeared first on Dinakaran.