பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல்

டெல்லி: பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் இயக்க வேண்டும் என பாரிவேந்தர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் ஒன்றிய ரயில்வே அமைச்சகம் கடிதம் எழுதியிள்ளது. திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு ஆய்வுகள் நடைபெறுவதாக ஒன்றிய ரயில்வே அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.

பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் இயக்க வேண்டும் என பாரிவேந்தர் கோரிக்கை விடுத்திருந்தார். இது தொடர்பாக பரிசீலனை நடத்திய ரயில்வேத்துறை , இதற்கான ஆய்வு நடப்பதாக தெரிவித்தது.

இது தொடர்பாக, அரியலூர் மற்றும் நாமக்கல் (116.26 கி.மீ.) புதிய பாதைக்கான இறுதி இட ஆய்வு அனுமதிக்கப்பட்டு, கணக்கெடுப்பு நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த ஆய்வின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் இது தொடர்பாக ரயில்வேத்துறை என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பது தொடர்பான விவரங்களை கடிதம் மூலமாக பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு அனுப்பியுள்ளது. பாவேந்தரின் கோரிக்கை ஏற்கப்பட்டு ரயில்பாதை அமைப்பதற்கான பணிகளை ரயில்வேத்துறை மேற்கொண்டுள்ளது.

The post பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க ஒன்றிய அரசு ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: