கருத்து கணிப்புகளை கதறவிட்ட மக்கள்

புதுடெல்லி: பாஜ மீண்டும் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் தேர்தல் முடிவுகள் மூலம் தவிடு பொடியாகி விட்டது. 18வது மக்களவைக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றன. இந்த தேர்தலில் பாஜ கூட்டணி 404 இடங்களை பெறும் என்று ஆருடம் கூறி பிரசாரத்தை துவங்கினார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

இதனால், பாஜ கூட்டணி 400க்கும் அதிகமாக சீட்களை பெறும் என்று பெரும்பாலான கருத்துக்கள் வெளியானது. அப்போது, இது பாஜவின் வேலை என்ற விமர்சனம் எழுந்தது. ஜூன் 1ம் தேதி வாக்குப் பதிவுகள் நிறைவடைந்ததும் பல்வேறு தேசிய ஊடகங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை வௌியிட்டன. இந்த அனைத்திலும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கணிப்புகள் தெரிவிக்கப்பட்டன.

நியூஸ் 24-டுடே வௌியிட்ட கருத்து கணிப்பில் பாஜ 400 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டது. இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா வௌியிட்ட கருத்து கணிப்பில் பாஜ கூட்டணி 361 முதல் 401 இடங்களில் வெல்லும், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 131 முதல் 1166 இடங்களை கைப்பற்றும் என்றும் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வௌியாகின. இதில் பாஜவுக்கு ஆதரவாக கார்ப்பரேட் நிறுவனங்களின் கருத்து கணிப்புகள் பொய்யானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கருத்து கணிப்புகளில் சொல்லப்பட்டதை விட பாஜ கூட்டணி குறைவாக இடங்களிலேயே வென்றுள்ளது. இதன் மூலம் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் போலியானவை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* பாஜவுக்கு 401 இடம் கணித்த பிரதீப் குப்தா கண்ணீர்
பாஜவுக்கு 401 இடம் வரை கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பை வெளியட்ட ஆக்சிஸ் மை நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா தொலைக்காட்சி நேரலையில் நேற்று கண்ணீர் விட்டு அழுதார்.

The post கருத்து கணிப்புகளை கதறவிட்ட மக்கள் appeared first on Dinakaran.

Related Stories: