இதன் இணையதளத்தில் நேற்று வெளியிடப்பட்ட புள்ளி விவரங்களின்படி, 2020-21ம் ஆண்டில் 19,183 மனுக்கள் பதிவு செய்யப்பட்டு, அதில் 17,017 மனுக்கள் முடிக்கப்பட்டு, ஆண்டு இறுதியில் 38,116 மனுக்கள் நிலுவையில் இருந்தன. இது, 2022-23ல் 19,233 ஆக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2021-22ல் 28,793 மனுக்களுக்கும், 2022-23ல் 29,210 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளன. அதேசமயம், 10 தகவல் ஆணையர்கள் இருக்க வேண்டிய ஆணையத்தில் 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமை தகவல் ஆணையர் உட்பட மீதமுள்ள 6 பேர் பதவிக்காலம் இந்த ஆண்டில் முடிவடைய இருப்பது குறிப்பிடத்தக்கது.
The post ஒன்றிய தகவல் ஆணையத்தில் நிலுவை மனுக்கள் பாதியாக குறைப்பு appeared first on Dinakaran.