இதுதொடர்பாக, காவேரி மருத்துவமனை மருத்துவர் விகாஸ் அகர்வால் கூறியதாவது: இந்த மருத்துவ செயல்முறையின் வெற்றிக்கு முக்கிய அம்சம் மூளை நரம்பியல் மருத்துவர்கள், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் உளவியல் நிபுணர்களை உள்ளடக்கிய ஒரு குழு அணுகுமுறையாக இருக்கிறது. தொழில்நுட்ப துல்லியம் இந்த அறுவை சிகிச்சைக்கு முக்கியமானது என்றாலும் அதுமட்டும் போதாது; சாத்தியமுள்ள அதிகபட்ச அளவிற்கு வாழ்க்கையின் தரம் மீண்டும் நிலைநாட்டப்படுவதை உறுதி செய்வதற்கு பல்வேறு துறை நிபுணர்களின் ஒத்துழைப்பான முயற்சியும் அவசியம். இந்த வெற்றிகரமான அறுவை சிகிச்சை, மருத்துவமனையின் திறன்மிக்க மருத்துவ குழுவின் அர்ப்பணிப்பிற்கும், அனுபவத்திற்கும் மற்றும் முழு நம்பிக்கை வைத்திருந்த நோயாளியின் மன வலிமைக்கும் ஒரு நல்ல சான்றாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
The post 53 வயதான பார்கின்சன்ஸ் நோயாளிக்கு ஆழமான மூளை தூண்டுதல் அறுவை சிகிச்சை: காவேரி மருத்துவமனை சாதனை appeared first on Dinakaran.