மும்பை: 33வது ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 26ம்தேதி முதல் ஆகஸ்ட் 11ம் தேதி வரை மொத்தம் 17 நாட்கள் நடைபெற உள்ளது. கடந்த முறை இந்தியா 5 பதக்கம் வென்ற நிலையில் இந்த முறை 10 பதக்கங்களுக்கு மேல் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒருவராக பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மீது எதிர்பார்ப்பு உள்ளது. 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி, 2020 டோக்கியோவில் வெண்கலம் வென்ற சிந்து, இந்த முறையும் பதக்கம் வெல்வேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
அவர் அளித்துள்ள பேட்டியில், “என்னைப் பொறுத்தவரை, நான் எனது 200% பங்களிப்பை வழங்கும் இடம் ஒலிம்பிக் ஆகும். தேசத்தின் நம்பிக்கையை நிறைவேற்றி மூன்றாவது பதக்கத்தை என்னால் பெற முடியும் என்று நம்புகிறேன், எனது மனநிலை தங்கம் வெல்வதில் கவனம் செலுத்துகிறது. இது எனக்கு மிகுந்த ஊக்கத்தையும் நம்பிக்கையையும் தருகிறது’’ என்றார்.
The post பாரீஸ் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வேன்: பி.வி.சிந்து நம்பிக்கை appeared first on Dinakaran.