×

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை

சென்னை: பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்த கட்டமாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார். சென்னையின் 2-வது விமான நிலையம், காஞ்சிபுரம் அடுத்த பரந்தூரில் 20 கிராமங்களை உள்ளடக்கி 5000 ஏக்கரில் அமைகிறது. விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. பரந்தூர்விமான நிலையத்துக்கு தேவையான நிலத்தை கையகப்படுத்தும் பணியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை ஈடுபட்டு வருகிறது.

The post பரந்தூர் புதிய விமான நிலைய திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,K. Stalin ,Chennai ,MLA ,CHENNAI'S 2ND AIRPORT ,KANCHIPURAM ,BHARANDUR ,Dinakaran ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை