×

நவாஸ் கனி எம்.பி சகோதரர் மறைவு முதல்வர் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் துறைமுகம் காஜா மற்றும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மாநிலத் துணைத் தலைவருமான கே.நவாஸ் கனி ஆகியோரின் சகோதரர் சிராஜூதீன் மறைந்த செய்தியறிந்து வருந்தினேன்.

அன்புச் சகோதரரை இழந்து தவிக்கும் துறைமுகம் காஜா, நவாஸ் கனி ஆகியோருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,Nawaz Gani ,Chennai ,Tamil Nadu ,M.K. Stalin ,Tamil Nadu Backward Classes Economic Development Corporation ,Port Kaja ,Ramanathapuram Lok Sabha ,Tamil Nadu Waqf Board ,Indian Union Muslim League… ,
× RELATED சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது: தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை