திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 16ம் தேதி தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம்

துரைப்பாக்கம்: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 11 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு பங்குனி திருவிழா, வரும் 16ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, நாளை இரவு ஊர் எல்லை காவல் தெய்வமான செல்லியம்மன் வீதி உலாவும், 15ம் தேதி இரவு விநாயகர் வீதி உலா நடக்கிறது. 16ம் தேதி இரவு 9.30 மணிக்கு கொடியேற்றம், யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடக்கிறது. 17ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் சூரிய பிரபையில் காமதேனுக்கு காட்சி அருளல், இரவு 8.30 மணிக்கு சந்திரசேகரர் சந்திரனுக்கு காட்சியருளல் மற்றும் தியாகராஜர் வீதி உலா நடக்கிறது.

18ம் தேதி காலை 6 மணிக்கு சந்திரசேகரர் நந்தி வாகனத்தில் சூரியனுக்கு காட்சி அருளல், தொடர்ந்து இரவு 8.30 மணிக்கு சந்திரசேகர் பூத வாகனத்தில் காட்சி அருளல், இரவு 10 மணிக்கு தியாகராஜர் 3ம் பவனி பார்த்தசாரதிக்கு அருளல் ஆகியவை நடைபெற உள்ளது. 19ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் புருஷா மிருக வாகனத்தில் பிரிங்கி முனிவருக்கு காட்சியருளல், இரவு 8.30 மணிக்கு சந்திரசேகரர் நாக வாகனத்தில் காட்சி அருளல், இரவு 10 மணிக்கு தியாகராஜர் 4ம் பவனி சந்திரனுக்கு அருளல். 20ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகரர் தொட்டி விழா எமதர்மனுக்கு அருளல், இரவு 9 மணிக்கு சந்திரசேகர் விடையூர்தி காட்சி (ரிஷப வாகனம்), பஞ்ச மூர்த்திகள் வீதி உலா, இரவு 2 மணிக்கு தியாகராஜர் 5ம் திருப்பவனி ராமபிரானுக்கு அருளல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

21ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் ரட்சகவிற்கு அருளல், இரவு 8.30 மணிக்கு சந்திரசேகரர் யானை வாகனத்தில் காட்சி அருளல், இரவு 10 மணிக்கு தியாகராஜர் 6ம் திருபவனி இந்திரனுக்கு அருளல், 22ம் தேதி காலை 6.30 மணிக்கு சந்திரசேகர் தேர் திருவிழா பிரம்மனுக்கு காட்சியருளல், இரவு 9 மணிக்கு சந்திரசேகர் புஷ்ப விமானம், தியாகராஜ வீதி உலா, 23ம் தேதி காலை 9 மணிக்கு சந்திரசேகர் 4 மறைகளுக்கு அருளல், மாலை 6 மணிக்கு பரிவேட்டை விழா, இரவு 1 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது. 24ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு கல்யாண சுந்தரர் திருக்கல்யாணம், மாலை 6.30 மணிக்கு அகத்தியருக்கு திருமண காட்சி அருளல், இரவு 10 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெறுகிறது.

25ம் தேதி காலை 6:30 மணிக்கு சந்திரசேகரர் கடல் நீராடல், இரவு 8 மணிக்கு திரிபுரசுந்தரி தியாகராஜர் சுவாமி திருமண விழா, இரவு 10.30 மணிக்கு கொடியிறக்கம், தொடர்ந்து வால்மீகி முனிவருக்கு 18 திருநடன காட்சி அருளி வீடுபேறு அளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலை 6.00 மணிக்கு சந்திரசேகர் தெப்பத் திருவிழா, இரவு 9 மணிக்கு வெள்ளியங்கிரி விமானத்தில் சுவாமி வீதி உலா, தொடர்ந்து தியாகராஜர் திரிபரசுந்தரி அம்மனுக்கு அருளல் நிகழ்ச்சியும், அதிகாலை 4.30 மணிக்கு பந்தம்பரி 18 திருநடன காட்சி அருளல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஆலய வளாகத்தில் தினமும் மாலையில் ஆன்மிக சொற்பொழிவும், கர்நாடக இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சக்திவேல் மேற்கொண்டு வருகிறார்.

The post திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் பங்குனி திருவிழா 16ம் தேதி தொடக்கம்: ஏற்பாடுகள் தீவிரம் appeared first on Dinakaran.

Related Stories: