காரைக்குடியில் இருந்து சென்னை வந்த பல்லவன் ரயிலில் திடீர் புகை: பயணிகள் பதற்றம்

காரைக்குடி: சென்னை சென்ற பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பிரேக் பழுதால், திடீரென புகை வெளியேறி காரைக்குடி அருகே நின்று, ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் இருந்து சென்னைக்கு நேற்று அதிகாலை 5.35 மணியளவில் பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. 18 பெட்டிகளை கொண்ட இந்த ரயில், பள்ளத்தூர் அருகே, செட்டிநாடு பகுதியில் சென்றபோது, கடைசி பெட்டிக்கு முந்தைய பெட்டியில் திடீரென பிரேக் பழுது ஏற்பட்டு அந்தப் பெட்டியில் இருந்து குபுகுபுவென புகை வெளியேறியது.

இதனால் அந்த பெட்டியில் இருந்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து பாதுகாப்பு கருதி உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டது. மற்ற பெட்டிகளில் இருந்த பயணிகள் ரயில் எதற்காக நிற்கிறது என்ற காரணம் தெரியாமல் தவித்தனர். பின்னர் காரைக்குடியில் இருந்து வந்த இன்ஜினியர்கள், புகை வந்த பெட்டியில் பழுதை சீரமைத்தனர். அதன்பின்னர் ஒரு மணி நேரம் தாமதமாக காலை 6.40 மணியளவில் மீண்டும் ரயில் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.

The post காரைக்குடியில் இருந்து சென்னை வந்த பல்லவன் ரயிலில் திடீர் புகை: பயணிகள் பதற்றம் appeared first on Dinakaran.

Related Stories: