இந்நிலையில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த சர்வரில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் தரிசனம், ரோப்கார் என அனைத்து சேவைகளுக்கான டிக்கெட் வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பக்தர்கள் வெகுநேரம் காத்திருக்க நேர்ந்தது. அப்போது கோயில் ஊழியர்கள், பக்தர்கள் சிலருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சிறு வெள்ளை பேப்பர்களில் டிக்கெட்டுக்கான வாசகம் எழுதி கோயில் சீல் அடித்து டிக்கெட் போன்று வழங்கப்பட்டது. சுமார் 3 மணிநேரத்துக்கு பிறகு சர்வர் பிரச்னை சரி செய்யப்பட்டு அனைத்து சேவைகளும் துவங்கின.
The post பழநி கோயில் இணையதள சர்வர் 3 மணி நேரம் பழுது appeared first on Dinakaran.