திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையிலிருந்து தாடாகுளம் இரண்டாம் போக பாசன பரப்பிற்கு பாசன வசதி அளிக்கும் பொருட்டு 05.05.2023 முதல் 01.09.2023 வரை நாள் ஒன்றுக்கு 15 கன அடி வீதம் 120 நாட்களுக்கு 155.52 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதனால், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், புதச்சு மற்றும் பாலசமுத்திரம் கிராமத்திலுள்ள 501 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

The post திண்டுக்கல் மாவட்டம் பொருந்தலாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு! appeared first on Dinakaran.

Related Stories: