×

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் அலுவலகம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கம்யூ. எம்பி குற்றச்சாட்டு

புதுடெல்லி: குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்களவை உறுப்பினர் சந்தோஷ் குமார் எழுதியுள்ள கடிதத்தில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி கேரள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பாரத மாதா படம் வைக்கப்பட்டதால், மாநில விவசாயத்துறை அமைச்சர் பிரசாத் நிகழ்ச்சியை ரத்து செய்ததை சுட்டிக்காட்டி உள்ளார். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் மீண்டும், மீண்டும் அரசியல் முகவர்களாக செயல்படுகின்றனர். ஆளுநர் அலுவலகங்கள் ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்த மையங்களாக மாறி வருகின்றன. அரசியலமைப்பு விதிகள், கூட்டாட்சி கொள்கைகள் மற்றும் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் ஆணைகளை ஆளுநர்கள் தொடர்ந்து அவமதிக்கிறார்கள். இதை தீவிரமாக கருத்தில் கொண்டு, ஆளுநர்கள் அரசியலமைப்பு விதிகளை மீறாமல் இருப்பதை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

The post எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் அலுவலகம் தவறாக பயன்படுத்தப்படுகிறது: கம்யூ. எம்பி குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Governor ,CPI ,New Delhi ,President ,Draupadi Murmu ,Communist ,Rajya Sabha ,Santosh Kumar ,Agriculture Minister ,Prasad ,Kerala Governor's House ,World Environment Day ,Bharat Mata ,CPI(M ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...