×

ஆபரேஷன் சிந்தூர் தேசத்தின் வெற்றி: விமானப்படை தளபதி சிங் நெகிழ்ச்சி

புதுடெல்லி: டெல்லியில் நேற்று நடந்த விழா ஒன்றில் விமானப்படை தலைமை தளபதி ஏ.பி.சிங் கலந்து கொண்டார். அப்போது பேசிய ஏ.பி.சிங், “ஆபரேஷன் சிந்தூர் அனைத்து நிறுவனங்களும், அனைத்து படைகளும், மிகவும் தேர்ந்த தொழில்முறையில் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்ட ஒரு நடவடிக்கை.

ஆபரேஷன் சிந்தூர் ஒரு தேசிய வெற்றி. இதற்காக நான் ஒவ்வொரு இந்தியருக்கும் நன்றி கூறுகிறேன். ஒவ்வொரு இந்தியரும் இந்த வெற்றிக்காகவே காத்திருந்தார்கள். நாம் உண்மையின் பாதையில் சென்று கொண்டிருந்தோம். உண்மை நம்முடன் இருக்கும்போது எல்லாம் தானாகவே நடக்கும்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

The post ஆபரேஷன் சிந்தூர் தேசத்தின் வெற்றி: விமானப்படை தளபதி சிங் நெகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Operation Sindhu ,Air Chief ,Marshal Singh Laichi ,New Delhi ,Marshal ,A.P. Singh ,Delhi ,Operation Sindhu… ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் பெண் குழந்தைகளுக்கு...