இதன்படி, இந்தியர்களை மீட்டு வரும் நடவடிக்கைக்கு ஆபரேஷன் சிந்து என பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நடவடிக்கையில் முதல் விமானம் ஈரானில் இருந்து 110 இந்தியர்களுடன் கடந்த 19-ம்தேதி டெல்லி வந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து ஈரானில் இருந்து விமானங்கள் வந்தன. 290 பேர், 311 பேர், 280 பேர் என இந்தியர்கள் வந்தனர். இந்நிலையில், ஈரானில் சிக்கி தவித்த 282 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இன்று(25-06-2025) அதிகாலை 1 மணியளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
ஈரானில் இருந்து இதுவரை 2,858 இந்திய நாட்டினர் சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு உள்ளனர். இதனை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது எக்ஸ் வலைதள பதிவில் தெரிவித்துள்ளது. இதேபோன்று, 3 இலங்கை நாட்டினர் மற்றும் நேபாள நாட்டு குடிமகன்கள் 2 பேர் உள்பட 281 பேர் நேற்று ஈரானில் இருந்து விமானம் மூலம் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர்.
The post ஆபரேஷன் சிந்து : ஈரானில் இருந்து இதுவரை 2,858 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் appeared first on Dinakaran.
