ஊட்டியில் விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலம்

*பயணிகள் கூட்டம் அலைமோதியது

ஊட்டி : ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களில் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதனால் களை கட்டி காட்சியளித்தது. நீலகிரி மாவட்டத்தில் உறை பனிப்பொழிவு காரணமாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது. பகல் நேரங்களில் வெயில் கொளுத்தினாலும், குளிர் காணப்படுகிறது. இந்த சூழலில் பள்ளிகளில் பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் வார நாட்களில் ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது. கேரளா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய சுற்றுலா பயணிகளை மட்டுமே காண முடிகிறது. அதே நேரம் சனி, ஞாயிறு என வார இறுதி நாட்களில் ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் களைகட்டி காணப்படுகிறது.

இந்நிலையில் வார விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தற்போது வெயில் கொளுத்தி வரும் நிலையில் விடுமுறை நாளான நேற்று ஊட்டியில் இதமான காலநிலை நிலவிய நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் காணப்பட்டது. குழந்தைகள் தாவரவியல் பூங்கா புல் மைதானங்களில் விளையாடி மகிழ்ந்தனர். இதேபோல நகருக்கு வெளியில் உள்ள சூட்டிங் மட்டம், பைக்காரா படகு இல்லம், கேர்ன்ஹில் வனம் உள்ளிட்ட இடங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

The post ஊட்டியில் விடுமுறை நாளில் களைகட்டிய சுற்றுலா தலம் appeared first on Dinakaran.

Related Stories: