இதனிடையே மழையை எதிர்பார்த்து கேரட், பீட்ரூட், பூண்டு போன்றவைகள் பயிரிடப்பட்டு வருகின்றன. ஊட்டி அருகேயுள்ள புதுமந்து, கோழிப்பண்ணை, காந்தி நகர், ஓடைக்காடு, நஞ்சநாடு உள்ளிட்ட பகுதிகளில் படிமட்ட முறையில் காய்கறி பயிர்கள் பயிரிப்பட்டு அவை உரமிட்டு பராமரித்து வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,“தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்த்து நிலங்கள் தயார் செய்யப்பட்டு விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த படி பெய்யவில்லை.
இதனால் மோட்டார் பயன்படுத்தி மலைப்பாங்கான பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. தற்போது, ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த இரு நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது’’ என்றனர்.
The post ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் படிமட்ட விவசாய பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.