தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் புகார் அளித்தனர். அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, இரு பிரிவினரிடையே பகைமையை உருவாக்குதல், உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் கஸ்தூரி மீது எழும்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அதில் கஸ்தூரி, தெலுங்கின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார். ‘அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் சாதிப் பெயர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை. சாதியை சொல்லாமல் அவர்கள் படம் எடுக்கிறார்களாம். ரொம்ப சந்தோஷம். அப்போ… மத்த எல்லா இடங்களிலும் சொல்லாமல் இருக்கனும்ல… மதத்தை சொல்லாம இருக்கனும்ல.. தமிழ்நாட்டில் எத்தனையோ வருடம், எத்தனையோ பத்தாண்டாக 60 ஆண்டுகளுக்கு மேல் நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலைதான்.

ஒருவனின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அளிப்பதற்கு சமம்தான்’ என்றும் சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசினார். இதையடுத்து தெலுங்கு மக்களை இழிவுபடுத்திய கஸ்தூரியின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியது. பின்னர் தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். ” நான் தெலுங்கு மக்களை இழிவாக பேசவில்லை. தெலுங்கு மக்கள் புண்படும்படி பேசி இருந்தால் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன். கடந்த 2 நாட்களாக எனக்கு ஏராளமான மிரட்டல்கள் வருகின்றன. நான் ஒரு தேசியவாதி. யாருக்கும் எதிரானவர் கிடையாது. நான் குறிப்பிட்ட சில பற்றி தான் பேசி இருந்தேன்.

எனது பேச்சை தவறாக புரிந்து கொண்டனா். தமிழ் பிராமணர்களுக்கு ஆதரவாக தெலுங்கு சகோதரர்கள் இருக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்” என கஸ்தூரி கூறி இருந்தார். மேலும் தனது கருத்துக்களை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார். இந்நிலையில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் புகார் அளித்தனர்.

அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரை தொடர்ந்து, கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு எழும்பூர் போலீஸ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

The post தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Related Stories: