புபனேஷ்வர் : ஒடிசா ரயில் விபத்தில் 200ற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 900 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கோரமண்டல் ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், பலத்த காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், சிறிய காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 கருணை இழப்பீடாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
The post ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும் : ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு!! appeared first on Dinakaran.