×

ஒடிசாவில் பரபரப்பு கலெக்டர் வீட்டில் குத்தாட்டம் 5 போலீசார் சஸ்பெண்ட்

பாலசோர்: ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்ட கலெக்டராக இருப்பவர் மயூர் விகாஸ் சூர்யவன்ஷி. இவர் கடந்த 1ம் தேதி அலுவலக பணியாக வெளியூர் சென்றிருந்தார். அப்போது கலெக்டரின் இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தங்கள் சீருடையில் மது போதையில் நடனம் ஆடும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.இதையடுத்து போதையில் குத்தாட்டம் போட்ட 5 போலீசாரை சஸ்பெண்ட் செய்து எஸ்பி ராஜ் பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.

The post ஒடிசாவில் பரபரப்பு கலெக்டர் வீட்டில் குத்தாட்டம் 5 போலீசார் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Odisha ,Balasore ,Mayur Vikas Suryavanshi ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...