×

ஒடிசாவில் காலரா பரவல்.. 21 பேர் பலி; 1700 பேர் மருத்துவமனையில் அனுமதி : ஒன்றிய குழு நேரில் ஆய்வு!!

புபனேஸ்வர் : பாஜக ஆளும் ஒடிசா மாநிலத்தில் வயிற்று போக்கு காரணமாக அடுத்தடுத்து 21 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் ஜாஜ்பூரில் கடந்த 9ம் தேதி முதல் வயிற்று போக்கு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதையடுத்து நடத்தப்பட்ட பரிசோதனையில் சிலர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனிடையே தேன்கனல், பத்ராக், கியோஞ்சர் , கட்டாக் ஆகிய 7 மாவட்டங்களில் வயிற்றுப்போக்கு பரவ தொடங்கி உள்ளது.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து, அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வயிற்றுப் போக்கு காரணமாக 1700க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 1300 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி உள்ளனர். பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் குடிநீர் ஆதாரங்களை தூய்மைப்படுத்தி வருவதாகவும் வீடு வீடாக ஆய்வு செய்வதுடன் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே 14 பேர் கொண்ட ஒன்றிய குழு ஒடிசா மாநிலத்தில் ஆய்வு மேற்கொண்டது.

The post ஒடிசாவில் காலரா பரவல்.. 21 பேர் பலி; 1700 பேர் மருத்துவமனையில் அனுமதி : ஒன்றிய குழு நேரில் ஆய்வு!! appeared first on Dinakaran.

Tags : Cholera outbreak in Odisha ,Union committee ,Bhubaneswar ,BJP ,Odisha ,Jajpur, Odisha ,Cholera outbreak in ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...