திருப்பதியில் நவம்பர் மாத உற்சவ விவரங்கள் அறிவிப்பு

திருமலை: திருமலை திருப்பதியில் நவம்பர் மாதம் சிறப்பு உற்சவ நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. இதில் நவம்பர் 9ல் மாதாந்திர ஏகாதசி, 11ல் மாத சிவராத்திரி, 12ம் தேதி தீபாவளி ஆஸ்தானம், 13ம் தேதி வரலட்சுமி விரதம், 14ம் தேதி திருமலை நம்பி சாற்றுமுறை, 16ம் தேதி மணவாள மாமுனி சாற்றுமுறை, 17ல் நாகர் சதுர்தி, பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி தேவி பூதேவி தாயார்களுடன் வீதி உலா நடைபெற உள்ளது. 18ல் வருடாந்திர புஷ்ப யாகத்திற்கான அங்குரார்ப்பணம், 19ம் தேதி அன்று ஏழுமலையான் கோயில் புஷ்பயாகம், 26ல் கார்த்திகை மாத பவுர்ணமி, 27ல் திருமங்கை ஆழ்வார் சாற்றுமுறை, 28ல் திருப்பானழ்வார் வருட திருநட்சத்திரம் சிறப்பு பூஜை நடைபெற உள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

The post திருப்பதியில் நவம்பர் மாத உற்சவ விவரங்கள் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: