அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் உள்ள 5 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டுள்ளது. உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அணைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது என தகவல் தெரிவித்துள்ளனர்.

4,810 டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதி ஏற்பதுப்படவுள்ளது என தெரிவித்துள்ளனர். மதுபானம் வாங்கினால் பில் தருவது இதற்க்கு உண்டான நடவடிக்கை தான் கணினி மயமாக்கும் நடவடிக்கைகள் அதற்கான உபகரணங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டர்கள் போடப்பட்டு இருக்கின்றது.

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளை கணினி மயமாக்க அரசு திட்டமிட்டு அறிவிப்பு வெளியான நிலையில் உபகரணங்களை கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. மதுபானங்கள் உற்பத்தி, விற்பனை, மதுபானம் இருப்பு உள்ளிட்ட அனைத்து நடவடிக்கையும் கணினி மயமாக்கப்பட உள்ளது. டாஸ்மாக் கடைகளில் மின்னணு முறையில் பணம் செலுத்துவதற்கான வசதியும் ஏற்படுத்தப்படுகிறது. கணினி மயமாக்குவதன் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்வது தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஸ்வைப் மெஷின்கள் பொருத்தப்பட உள்ளதாக அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: