கோயிலில் கஞ்சா படையலிட வந்த 6 வடமாநில வாலிபர்கள்

கலசபாக்கம்: திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரமுள்ள பர்வதமலை மீது சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரம்மராம்பிகை அம்மன் சமேத மல்லிகார்ஜுனேஸ்வரர் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் வனத்துறையினர் மலை அடிவாரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வட மாநிலத்தைச் சேர்ந்த 6 வாலிபர்களை பிடித்து சோதனை நடத்தினர் அவர்களிடம் சிகரெட், குட்கா மற்றும் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அதை பறிமுதல் செய்து விசாரித்தனர். இதில் வட மாநிலங்களில் உள்ள சிவாலயங்களில் இவற்றை சுவாமிக்கு படையலுக்கு வைப்பார்களாம். அதேபோல் இங்கும் வைப்பார்கள் என கருதி எடுத்து வந்ததாக 6 பேரும் கூறியுள்ளனர். அவர்கள் 6 பேரையும் வனத்துறையினர் எச்சரித்து அனுப்பினர்.

The post கோயிலில் கஞ்சா படையலிட வந்த 6 வடமாநில வாலிபர்கள் appeared first on Dinakaran.

Related Stories: