×

நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் மூடல்

நீலகிரி: தென்மேற்கு பருவமழை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்றைய தினம் மாவட்டத்திலுள்ள சில சுற்றுலா தலங்கள் மூடப்பட்டது. தற்போது உதகை அரசு தாவரவியல் பூங்கா, ஊசிமலை, ரோஜா பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று மாலை 4 மணியளவில் மூடப்பட்டது. இந்த சுற்றுலா தலங்கள் நாளையும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் சுற்றுலா தலங்கள் மூடல் appeared first on Dinakaran.

Tags : Red ,Neelgiri district ,Nilgiri ,Udakai State Botanical Garden ,Dinakaran ,
× RELATED மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல்...