×

மாயமான வாய் பேச முடியாத மூதாட்டி காவல் கரங்கள் மூலம் மீட்டு உறவினரிடம் ஒப்படைப்பு

சென்னை: செம்மஞ்சேரி பேருந்து நிலையம் அருகே வாய் பேச முடியாமல் ஆதரவற்ற நிலையில் மூதாட்டி ஒருவர் இருப்பதாக செம்மஞ்சேரி போலீசார் வாட்ஸ் அப் எண் மூலம் புகைப்படத்துடன் சென்னை பெருநகர காவல் கரங்கள் அமைப்புக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி காவல் கரங்கள் தன்னார்வலர் குழு சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று வாய்பேச முடியாத மூதாட்டியை மீட்டு விசாரணை நடத்தினர். ஆனால் அவருக்கு காது கேட்கவில்லை, வாய் பேச முடியாததால் அவரை, மீட்டு முடிச்சூர் பகுதியில் உள்ள கை கொடுப்போம் முதியோர் காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.2,368 பணமும் அவரிடம் பத்திரமாக கொடுக்கப்பட்டது. பின்னர் காவல் கரங்கள் மூலம் மூதாட்டியின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி விசாரித்ததில் மீட்கப்பட்ட மூதாட்டி கொடுங்கையூர் எஸ்.ஏ.காலனி 10வது தெருவை சேர்ந்த மும்தாஜ்(65) என தெரியவந்தது. இதையடுத்து, காவல் கரங்கள் குழுவினர் மும்தாஜை மீட்டு அவரது சகோதரி மகன் ஷபிக் என்பவரிடம் ஒப்படைத்தனர். இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷனர் பாஸ்கர், காவல் கரங்கள் இன்ஸ்பெக்டர் மேரி ராஜூ, எஸ்ஐ புனிதா மற்றும் குழுவினர் உடன் இருந்தனர்.

Tags : Chennai ,Chemmancherry ,Chennai Metropolitan Police Service ,
× RELATED வி பி – ஜி ராம் ஜி என்ற புதிய...