×

பரங்கிப்பேட்டை அருகே உறவினரை தாக்கிய வழக்கில் முதியவருக்கு 7 ஆண்டு சிறை சிதம்பரம் நீதிமன்றம் தீர்ப்பு

புவனகிரி, நவ. 6:  பரங்கிப்பேட்டை அருகே உள்ள தீத்தாம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ்(57). இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினரான நடராஜன்(45) என்பவருக்கும் இடப் பிரச்னை இருந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதமும் இருந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2012ம் ஆண்டு ஜூலை மாதம் 25ம் தேதி செல்வராஜ் தனது வீட்டிற்கு முள்வேலி அமைத்துள்ளார். அப்போது நடராஜன் அங்கு சென்று, வேலி அமைப்பது குறித்து கேட்டுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் (57) அருகில் இருந்த இரும்பு பைப்பை எடுத்து நடராஜனின் தலையில் அடித்துள்ளார். அப்போது அவரது மனைவி சாந்தாவும் (55) உடன் இருந்துள்ளார். இதில் படுகாயமடைந்த நடராஜன் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

பின்னர் கிள்ளை காவல் நிலையத்தில் நடராஜன் புகார் அளித்தார். இது குறித்து செல்வராஜ், அவரது மனைவி சாந்தா ஆகிய இருவர் மீதும் கிள்ளை போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் சிதம்பரம் உதவி அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்து, நடராஜனை இரும்பு பைப்பால் தாக்கிய செல்வராஜூக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதமும், அவரது மனைவி சாந்தாவுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நீஷ் தீர்ப்பளித்தார்.

Tags : Chidambaram ,court ,prison ,relative ,Parangipettai ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயில் கோவிந்தராஜ...