×

விருத்தாசலம் அருகே ஆபாச பேச்சு: வாலிபர் கைது


விருத்தாசலம், மார்ச். 28: விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் மற்றும் போலீசார் மங்கலம்பேட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அண்டக்குளத்தான் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் ராமச்சந்திரன்(23) என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஆபாசமாக பொது இடத்தில் நின்று கொண்டு பேசிக் கொண்டிருந்ததை போலீசார் எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் பேசிக் கொண்டிருந்ததால் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Vridthachalam ,
× RELATED முன்னாள் எம்எல்ஏ மகனை துப்பாக்கியால்...