×

போலி சாதி சான்றிதழ் பெற்ற ஒன்றியக்குழு தலைவரை கைது செய்ய வேண்டும்

கடலூர், மார்ச் 28: போலி சாதி சான்றிதழ் பெற்ற ஒன்றியக்குழு தலைவரை கைது செய்ய வேண்டும் என எஸ்பியிடம் கவுன்சிலர்கள் பரபரப்பு புகார் கூறியுள்ளனர். கடலூர் மாவட்டம் கம்மாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராமிடம் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கம்மாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தனது சாதியை மறைத்து, தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான போலியான சாதி சான்றிதழ் பெற்றுள்ளார். கல்லூரி படிக்கும்போதும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான அனைத்து சலுகைகளையும் பெற்றுள்ளார். ஆனால் இவரது தந்தைக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு சாதி சான்றிதழ் உள்ளது. இதுகுறித்து ஊ.மங்கலம் போலீசில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஒன்றியக்குழு தலைவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. எனவே இதுகுறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags : Union ,
× RELATED கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது...