×

பழைய இரும்பு கடையில் 60 ஆயிரம் பணம் திருடியவர் அதிரடி கைது

திருபுவனை, மார்ச் 27:  கலிதீர்த்தாள்குப்பம் அடுத்த ஆண்டியார் பாளையம் கடைத்தெரு பகுதியில் பழைய இரும்பு கடை நடத்தி வருபவர் ஆறுமுகம்(62). சம்பவத்தன்று விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அருகே உள்ள பாடிப்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சேகர் மகன் தினகரன் (35)என்பவர் ஆறுமுகம் கடைக்கு வந்து, தான் அருகில் உள்ள வளவனூரில் இருந்து வருவதாகவும், பழைய இரும்பு பொருட்களை விற்பனை செய்வதாகும் என கூறி, தன்னைப் பற்றி அறிமுகப்படுத்திக் கொண்டு, ஆறுமுகத்திடம் பேச்சு கொடுத்துள்ளார்.

அதனை நம்பி ஆறுமுகம் பிளாஸ்டிக் பொருட்கள், இரும்புகள் விற்பனை செய்த பணம் ரூ. 60 ஆயிரத்தை அவர் முன் எண்ணி ரொக்கமாக ஒரு பையில் போட்டு கடையில் வைத்திருந்தார். அதனை நோட்டமிட்டிருந்த தினகரன் அப்பொழுது இரும்பு கடைக்காரர் ஆறுமுகம் பின்பக்கமாக உள்ள அறைக்கு சென்று வருவதற்குள் தினகரன் 60 ஆயிரம் இருந்த பணப்பையை எடுத்துக் கொண்டு மாயமானார். சற்று நேரத்தில் வந்த ஆறுமுகம் பணம் மாயமானதும், அதனை தினகரன் எடுத்து சென்றதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஆறுமுகம் திருபுவனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், குற்றவியல் போலீசார் அசோகன், சத்தியமூர்த்தி மற்றும் போலீசார் நேற்று காலை ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா மூலம் குற்றவாளியை தேடி வந்தனர். இதற்கிடையில் ஆண்டியார்பாளையம் சாராயக்கடை அருகில் போலீசாரை கண்டதும் ஓட முயன்ற தினகரனை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், தான் இரும்பு கடையில் 60 ஆயிரம் ரொக்க பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை