×

ஆண்டிபட்டி 2வது வார்டில் போர்வெல் மோட்டார் பழுது புழக்கத்திற்கு தண்ணீரின்றி மக்கள் அவதி

ஆண்டிபட்டி, நவ. 6: ஆண்டிபட்டி 2வது வார்டில் போர்வெல் மோட்டார் பழுதானதால், பொதுமக்கள் புழக்கத்திற்கு தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். இதை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இதில் 2வது வார்டில் உள்ள முனியாண்டி கோயில் தெருவில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் பயன்பாட்டிற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் அமைக்கப்பட்டது. இதிலிருந்து பைப் லைன் அமைத்து முனியாண்டி கோவில் தெரு, தோப்பூர் சந்து, பகவதி கோயில் தெரு ஆகிய பகுதி பொதுமக்களின் புழக்கத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது. இந்நிலையில், கடந்த மாதம் போர்வெல் மோட்டார் பழுதானது. இதை கடந்த ஒரு மாதமாக சரிசெய்யாததால், பொதுமக்கள் புழக்கத்திற்கு தண்ணீரின்றி அவதிப்படுகின்றனர். எனவே, 2வது வார்டில் போர்வெல் மோட்டாரை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Ward People ,Andipatti ,
× RELATED ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு…