×

ஒரத்தநாடு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 16 பேர் மீது வழக்கு

 

ஒரத்தநாடு, ஜூன் 10: ஒரத்தநாடு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 16 பேர் மீது வழக்குப்பதிந்த போலீசார் 8 பேரை கைது செய்தனர். மேலும் 8 பேரை தேடி வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள அக்னி ஆற்றில் இருந்து மர்ம நபர்கள் இரவு நேரங்களில் மாட்டு வண்டியில் மணல் கடத்துவதாக வாட்டாத்திகோட்டை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சாம்சங்லியோவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது 16 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி சென்றபோது மடக்கிப் பிடித்தனர். அப்போது மாட்டு வண்டியை விட்டுவிட்டு 8 பேர் அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதையடுத்து போலீசார் 8 பேரை கைது செய்து, 16 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வாட்டாத்தி கோட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்,

விசாரணையில் வெங்கரை கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன்( 65), மாசிலாமணி (55), நாடிமுத்து (42) , இடையங்காடு கிராமத்தை சேர்ந்த (பிரசாத் 27), வெங்கடாஜலபதி ( 33), சுதாகரன் (42), நெய்வேலி செட்டிகாடு கிராமத்தைச் சேர்ந்த ஸ்பெஷல் மணி (55), பெரியய்யா (55) ஆகியோர் மீத வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post ஒரத்தநாடு அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்திய 16 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Orathanadu ,Agni ,Thanjavur ,
× RELATED கள்ளச்சந்தையில் மது விற்க முயன்ற 2 பேர் கைது: 97 மதுபாட்டில்கள் பறிமுதல்