×

ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு…

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி பகுதியில் தென்பட்ட வெள்ளை காகங்களை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் கண்டு ரசிக்கின்றனர். காகங்கள் கருப்பு நிறத்தில் இருப்பதை தான் பார்த்து இருப்போம். கிராமங்களில் வேடிக்கை பேச்சுக்காக ‘வெள்ள காக்கா பறக்குது பாரு’ என கூறுவது உண்டு. ஆனால் வெள்ள காக்கா என்பது இல்லாத விஷயம் அல்ல; ‘இல் பொருள் உவமையும் அல்ல’ என உலகிற்கு உணர்த்தும் விதமாக அவ்வப்போது வெள்ளை காகங்கள் நடமாட்டம் குறித்த செய்திகளும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.

அந்த வகையில் தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள கொப்பையம்பட்டியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள மரங்களில் மூன்று வெள்ளை காகங்கள் உலா வருகின்றன. மற்ற காகங்களுடன் சேர்ந்து சுற்றிவரும் இந்த மூன்று வெள்ளை காகங்களை ஊர் மக்கள் பார்த்து ரசிக்கின்றனர். மற்ற காகங்களைப் போல் இல்லாமல் இதன் ஒலியும் வித்தியாசமாக உள்ளது. ஓராண்டிற்கும் மேலாக இந்த மூன்று வெள்ளை காகங்களும் அதே பகுதியில் சுற்றி வருவதாகவும், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சாப்பாடு மற்றும் தானியங்களை கொடுத்தால் சாப்பிட்டு விட்டு சுற்றித் திரிவதாகவும் கூறுகின்றனர்.

 

The post ஆண்டிபட்டியில் ஆச்சர்யம் வெள்ள காக்கா பறக்குது பாரு… appeared first on Dinakaran.

Tags : Antipatti… ,Andipatti ,
× RELATED ஆண்டிபட்டி மாணவர்களுக்கு பாராட்டு