×

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு

 

திருத்துறைப்பூண்டி, ஜூன் 10: திருவாரூரில் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை சப்-கலெக்டர் தமிழ்மணி ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது. 6244 காலி பணியிடங்களுக்கான தேர்வில் சுமார் 20 லட்சம் பேர் எழுதினார்கள்.திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை தேர்வு மையங்களுக்கான வினாத்தாள்கள் திருத்துறைப்பூண்டி சார்நிலைக் கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தது.

அதனை போலீஸ் பாதுகாப்புடன் பாதுகாப்பாக அந்தந்த தேர்வு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.அதனைத் தொடர்ந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை தாலுகாவில் 24 மையங்களில் நேற்று காலை 9.30 மணிக்கு தேர்வு தொடங்கியது. இதில் 5000க்கும் மேற்பட்ட தேர்வர்கள் தேர்வு எழுதினர். தேர்வு மையங்களை துணை கலெக்டர் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் தமிழ்மணி, தாசில்தார் கார்ல்மார்க்ஸ், டிஎன்பிஎஸ்சி கண்காணிப்பாளரும், உதவி பிரிவு அலுவலருமான பிரசன்னகுமார் ஆகியோர் மேற்பார்வை செய்தனர்.

The post டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு appeared first on Dinakaran.

Tags : TNPSC ,Group ,Tiruthurapoondi ,Tamilmani ,TNPSC Group ,Tiruvarur ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED செப்டம்பர் மாதம் 14ம் தேதி குரூப் 2,...