×

திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஜமாபந்தி நாளை துவக்கம்

 

திருத்துத்துறைப்பூண்டி, ஜூன் 10: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தாலுகா அலுவலகத்தில் பசலி 1433க்கான ஆண்டு வருவாய்த் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சி ஜமாபந்தி அலுவலரும் துணை கலெக்டருமான பாலசந்திரன் தலைமையில் நாளை (11ம் தேதி) செவ்வாய் கிழமை காலை 9 மணிக்கு துவங்கி நடைபெறுகிறது. முதல் நாள் 11ம் தேதி ஆலத்தம்பாடி குறுவட்டம் கீராளத்தூர், திருத்தங்கூர், ஆண்டாங்கரை, கோமல், அம்மனூர், விளத்தூர், கச்சனம், பூசலாங்குடி, ஆலிவலம், ஆதனூர், ஆலத்தம்பாடி,

திருவலஞ்சுழி, பழையங்குடி, புதன் கிழமை 12ம் தேதி 2-ம் நாள் திருத்துறைபூண்டி குறுவட்டம் பனையூர், திருப்பத்தூர், ராயநல்லூர், செட்டியமூலை, விளக்குடி, கீரக்களூர், குன்னூர், குரும்பல், மணலி, சாத்தங்குடி, மேட்டுப்பாளையம், கொத்தமங்கலம், காடுவாகொத்தமங்களம், நுணாக்காடு, தீவம்மாபுரம், வேளூர், கொக்கலாடி, கொருக்கை, திருத்துறைப்பூண்டி, பாமணி, தேசிங்குராஜபுரம், நெடும்பலம், சிங்களாந்தி, வியாழன் கிழமை 13ம் தேதி 3ம் நாள் எடையூர் குறுவட்டம் மருதவனம், எழிலூர், மாங்குடி,

வங்கநகர், ஆரியலூர், ஓவரூர், கள்ளிக்குடி, கட்டிமேடு, சேகல், ஆதிரெங்கம், பாண்டி, எடையூர், கீழப்பாண்டி, பிச்சன்கோட்டகம், மேலப்பெருமழை, கீழப்பெருமழை, குன்னலூர், எக்கல், மேலமருதூர், விளாங்காடு ஆகிய கிராமங்களில் உள்ள பொதுமக்கள், ஜமாபந்தி அலுவலர் இடம் தங்களது பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்று திருத்துறைப்பூண்டி தாசில்தார் கார்ல்மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.

 

The post திருத்துறைப்பூண்டி தாலுகாவில் ஜமாபந்தி நாளை துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Jamabandhi ,Thiruthurapundi taluk ,Tiruthurapoondi ,Tiruvarur district ,Thiruthurapoondi ,Jamabandi ,Officer ,Deputy Collector ,Balachandran ,
× RELATED செங்கல்பட்டு ஜமாபந்தியில் மனு அளித்த...