×

கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 20: கிருஷ்ணகிரியில் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பாபாமாதையன், சலீம்பாஷா, முத்து, ரஜினிசங்கர், நாகராஜ், சாதிக்பாஷா, கோவிந்தராஜ், சுபலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கார்த்திகேயன் வரவேற்றார்.  கூட்டத்தில், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினார். கூட்டத்தில், கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு பணிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்டை, வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளுக்கு, இலவச குடிநீர் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், ராஜேஷ்குமார், ராஜ்குமார், வினோத்குமார், நரசப்பா, முருகேசன், குணசேகரன், சின்னசாமி, சீனிவாசன், கேசவன், ரத்தினம்மா, சரவணன், மஞ்சுநாத்ராவ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Meeting ,Rajini ,Pradeshiya Sabha ,executives ,Krishnagiri ,
× RELATED போஸ்டர் ஒட்ட வேண்டாம்: ரசிகர்களுக்கு ரஜினி தடை