×

தளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவம் வழங்கல்

தேன்கனிக்கோட்டை, மார்ச் 20: தளி தெற்கு ஒன்றிய திமுக உட்கட்சி தேர்தல் கிளை படிவங்கள் தலைமை கழக நிர்வாகியிடம் வழங்கும் முகாம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், தளி தெற்கு ஒன்றியத்தில் திமுக உட்கட்சி தேர்தலை முன்னிட்டு பூர்த்தி செய்யப்பட்ட 79 கிளை படிவங்கள், தலைமைக் கழக நிர்வாகி காசிமுத்து மாணிக்கத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் மணிமேகலை நாகராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயராமன், தளி தெற்கு ஒன்றிய செயலாளர் திவாகர், ஒன்றிய அவைத்தலைவர் நாகராஜ், துணை செயலாளர் முனிராஜ், முன்னாள் பொதுகுழு உறுப்பினர் கங்கப்பா, மாவட்ட இளைஞணி அமைப்பாளர் சீனிவாசன், கிருஷ்ணமூர்த்தி, பைரவமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thalai Southern Union DMK Int'l Electoral Branch ,
× RELATED கஞ்சா விற்ற முதியவர் கைது