×

டூவீலரின் சக்கரங்களை திருடிச் சென்ற கும்பல்

 

சூளகிரி, மே 30: சூளகிரி அடுத்த ஒமதேப்பள்ளி கிராமத்தில், கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பெரிய ஏரி அமைந்துள்ளது. கோடை வெயில் மற்றும் ேபாதிய மழை இல்லாததால், இந்த ஏரி நீரின்றி வறண்டு காணப்படுகிறது. நேற்று, ஏரிக்கரையில் டூவீலர் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், போலீசார் அங்கு சென்று பார்த்த போது, டூவீலர் ஒன்று 2 சக்கரங்கள் இல்லாமல் கிடந்தது. வெளியூரில் இருந்து டூவீலரை திருடி வந்த மர்ம நபர்கள், அதன் சக்கரங்களை மட்டும் கழற்றிக்கொண்டு, வண்டியை ஏரிக்கரையில் வீசிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, வண்டியின் பதிவு எண் மற்றும் அருகில் உள்ள பகுதிகளில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டு உள்ள சிசிடிவி கேமராக்களின் பதிவை கொண்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post டூவீலரின் சக்கரங்களை திருடிச் சென்ற கும்பல் appeared first on Dinakaran.

Tags : Choolagiri ,Periya lake ,Krishnagiri – Hosur National Highway ,Omadepally ,Dinakaran ,
× RELATED கூடுவாஞ்சேரியில் உள்ள பெரிய ஏரி புனரமைப்பு பணியில் முறைகேடு