மதுரை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தனி உதவியாளராக இருந்தவர் பூங்குன்றன். இவர் சசிகலாவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஜெயலலிதா உயிருடன் இருந்தவரை மிகவும் செல்வாக்குடன் இருந்தார். அதிமுகவினர் மத்தியில் மிகவும் பிரபலமான இவர், ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு கட்சி மற்றும் கட்சியினருடனான தொடர்பில் இருந்து விலகியே இருந்தார். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி, உடல் நலக்குறைவால் சமீபத்தில் சென்னையில் மரணடைந்தார். இதையடுத்து தேனி மாவட்டம், பெரியகுளத்திலுள்ள ஓபிஎஸ்சை ஜெயலலிதாவின் மாஜி உதவியாளர் பூங்குன்றன், கடந்த 3 தினங்களுக்கு முன் சந்தித்து ஆறுதல் கூறினார். ஜெயலலிதாவின் உதவியாளராகவும், சசிகலாவுக்கு நெருக்கமாகவும் இருந்த பூங்குன்றன் ஓபிஎஸ்சை சந்தித்த விவகாரம் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …
The post ஜெயலலிதா மாஜி உதவியாளர் ஓபிஎஸ்சுடன் திடீர் சந்திப்பு appeared first on Dinakaran.
