×

ஓசூரில் பாஜ சார்பில் குடியுரிமை சட்ட திருத்த பயிற்சி

ஓசூர், மார்ச்.18:ஓசூரில் நேற்று பாஜ சார்பில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு பாஜ மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமை வகித்தார். நகர தலைவர் ராஜசேகர் வரவேற்றார். மாநில செயலாளர் ராகவன், மாநில பொது செயலாளர் நரேந்திரன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து, பாஜ மாநில செயலாளர் ராகவன் நிருபர்களிடம் கூறியது, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பாஜ சார்பில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி அனைத்து கிராமங்களில் நடக்கிறது.

மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை எல்லா கிராமங்களிலும் பாஜவினர் மக்களை சந்தித்து சிஏஏ குறித்து பேசுகின்றனர். சிஏஏ என்பது குடியுரிமை வழங்குகின்ற சட்ட திருத்தமே தவிர யாருடைய உரிமைகளையும் பறிப்பதல்ல. புதிய மாநில தலைவராக முருகன் நியமனம் செய்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவரது வழிகாட்டுதலின்படி வருகின்ற சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் பேசினார்.
முகாமில் மாவட்ட பொது செயலாளர்கள் ராமகிருஷ்ணன், சீனிவாசலு, ரங்கநாத், மாவட்ட செயலாளர்கள் சீனிவாசன், பாபு, சுரேஷ், ராஜண்ணா, மாவட்ட துணை தலைவர்கள் சுவேதா, பொருளாளர் விஜய்குமார், நிர்வாகிக்ள் முருகன், மஞ்சு, கிஷோர், கிரண்ரெட்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நகர தலைவர் பிரதீப்குமார் நன்றி கூறினார்.

Tags : Baja ,Hosur ,
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...