×

தம்பிதுரைக்கு வாழ்த்து திருவெறும்பூர் பெல் குடியிருப்பு பகுதியில் ரூ.13.50 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருள் பறிமுதல் வேனை நிறுத்தி டிரைவர் தப்பியோட்டம்

திருவெறும்பூர், மார்ச் 12: திருவெறும்பூர் அருகே பெல் குடியிருப்பு பகுதிக்கு வந்த ரூ.13.50 லட்சம் மதிப்பிலான தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை பெல் செக்யூரிட்டிகளை பார்த்து போலீசார் என சாலை ஒரம் லோடு வேனை நிறுத்திவிட்டு தப்பி சென்ற வேன் டிரைவரை பெல் போலீசார் தேடி வருகின்றனர்.திருவெறும்பூர் அருகே பெல் நிறுவனத்தின் குடியிருப்பு பகுதியான கணேசபுரம் பகுதியில் நேற்று மாலை லோடு வேன் ஒன்று வந்துள்ளது. அதனை கண்ட பெல் செக்யூரிட்டிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதையடுத்து அந்த வேன் டிரைவர் அவர்கள் போலீஸ் என்று பயந்து வேனை சாலையோரம் நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர். பின்னர் பெல் செக்யூரிட்டிகள் அந்த வேனை வேறு ஒரு டிரைவரை ஓட்டவிட்டு பெல் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பெல் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் அந்த வேன் கதவை திறந்து பார்த்தபோது வேனிற்குள் 45 மூட்டைகளில் 135 பண்டல்கள் அடங்கிய அரசு தடை செய்துள்ள புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. இதன் சந்தை மதிப்பு சுமார் ரூ.13.50 லட்சமாகும். மேலும் இச்சம்பவம் குறித்து பெல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய டிரைவரையும், அதன் உரிமையாளரையும் தேடி வருகின்றனர்.

Tags : Thambithurai ,area ,Thambuthurai Bell ,
× RELATED முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் சிலை உடைப்பு