×

கலெக்டரிடம் மனு கொடுக்க வந்த வேலூர் இப்ராகிம் தடுத்து நிறுத்தம்

சேலம், மார்ச் 12: தமிழ்நாடு ஏகத்துவ பிரசார ஜமாஅத்தின் மாநில தலைவர் வேலூர் இப்ராகிம். இவர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார். சேலத்தில் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் கோட்டை பகுதியில், இச்சட்டத்திற்கு ஆதரவாக துண்டுபிரசுரம் விநியோகம் செய்யப்போவதாகவும், கலெக்டரை சந்தித்து மனு கொடுக்க போவதாகவும் அறிவித்திருந்தார். அதே நேரத்தில் கோட்டை பகுதியில் கடந்த 24 நாட்களாக இஸ்லாமிய பெண்கள் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வேலூர் இப்ராகிம் துண்டுபிரசுரம் கொடுக்க வந்தால், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக போலீசார் கருதினர்.

இதையடுத்து நாழிக்கல்பட்டியை சேர்ந்த வக்கீல் மணிகண்டன் என்பவரது வீட்டில் தங்கியிருந்த இப்ராகிமை, டூரல் டிஎஸ்பி உமாசங்கர், இன்ஸ்பெக்டர் அம்சவள்ளி ஆகியோர் சந்தித்தனர். 30க்கும் மேற்பட்ட போலீசாரும் வீட்டின் அருகே குவிக்கப்பட்டனர்.  அப்போது போலீசார், இஸ்லாமியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டம் நடத்தி வருவதால், கலெக்டரை சந்திக்க வருவதை தள்ளிபோடுமாறு இப்ராகிடம் கூறி, அவரை அங்கிருந்து வெளியே செல்லாமல் தடுத்து நிறுத்தினர். பின்னர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தி, கலெக்டரிடம் இப்ராகிம் வழங்க இருந்த கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டார்.

Tags : Vellore Ibrahim ,Collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...