×

இருங்களாக்குறிச்சியில் பரபரப்பு பெரம்பலூரில் மகளிர் துணை தபால் நிலையம் திறப்பு விழா புதிய சேமிப்பு கணக்குகளை துவங்கி பயனடைய வேண்டும் கோட்ட கண்காணிப்பாளர் வேண்டுகோள்

பெரம்பலூர், மார்ச் 11: உலக மகளிர் தினத்தை முன்னிட்டு அகில இந்திய தபால் துறையின், திரு வரங்கம் கோட்டத்தின் சார் பாக, பெரம்பலூர்கலெக்டர் அலுவலக வளா கத்தின் தரைத்தளத்தில் உள்ள துணை தபால் நிலையம், மகளிர் துணை தபால் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து துணை தபால் நிலையத்தின் திறப்பு விழா கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடை பெற் றது. பெரம்பலூர் உட்கோ ட்ட தபால் நிலைய ஆய்வாளர் விஜய் பாலாஜி வரவே ற்றார். பெரம்பலூர் தலைமை தபால் நிலைய அதிகாரி தங்கராஜ் தலைமை வகித்தார். முற்றிலும் பெ ண்களே பணிபுரியக்கூடிய இந்த துணைத் தபால் நிலையத்தை, திருவரங்கம் தபால் கோட்ட கண்காணிப்பாளர் சொர்ணம் குத்து விளக்கேற்றி திறந்து வைத்துப் பேசியதாவது : பெரம்பலூர் மாவட்டத்தில், தபால் துறையின் கீழ், பெர ம்பலூரில் 1 தலைமைத் தபால் நிலையமும், மாவ ட்ட அளவில் 19 இடங்களில் துணைத் தபால் நிலையங்களும், 96 இடங்களில் கிளைத் தபால் நிலையங்களும் இயங்கி வருகின்றன. உலக மகளிர் தினத்தையொட்டி, பெரம்ப லூர் கலெக்டர் அலுவலக தரைத் தளத்தில் இயங்கி வந்த துணைத் தபால் நி லையம் மட்டும், முற்றிலும் பெண்கள் பணிபுரியக் கூடிய மகளிர் தபால் நிலைய மாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் முதல்முறையாக மகளிருக்கான துணைத் தபால் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப் பட்டுள்ளது.

இதனை கலெக்டர் அலுவலகப் பெருந்திட்ட வளாகத்தில் பணிபுரியும் அனைத்துத் துறை அலுவலர்களும், கலெக்டர் அலுவலகத்தி ற்குப் பல்வேறு கோரிக்கைகளுக்காக வந்து செல்லும் மனுதாரர்கள், நகரப் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உள்ளிட்ட அ னைவரும் முழுமையாகப் பயன்படுத்தி, சிறு சேமிப்புக் கணக்குகளைத் தொடங்குவதோடு, இந்திய தபால் துறையால் அறிவிக் கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டுவரும் பல்வேறு சேமிப்புத் திட்ட ங்களில் சேர்ந்து, தங்கள் புதிய கணக்குகளைத் தொடங்கி, அதற்கான முழுப் பயனை அடைய வேண்டும் என்றார்.விழாவில் வணிக வளர்ச்சி அலுவலர் தினேஷ் குமரன், ஐபிபிபி வங்கி மேலாளர் நிவேதா ஆகியோர் வாழ்த்தி பேசினார். இதில் தபால் துறை அலுவலர்கள் மற் றும் வாடிக்கையாளர் கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவை யொட்டி செல்வமகள் சேமி ப்புக் கணக்கு தொடங்கப் பட்ட வாடிக்கையாளர்கள் 10 பேருக்கு, உடனே அதற்கான பாஸ் புத்தகம் வழங்கப் பட்டது. விழாவிற்கு வருகை தந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags : Opening Ceremony of Women's Sub Post Office ,Parambalur ,
× RELATED இருங்களாக்குறிச்சியில் பரபரப்பு...