×

மணப்பாறை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் மனைவி உள்பட 3 பேரை கத்தியால் குத்தியவர் கைது

 

துவரங்குறிச்சி, மே 18: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டியில் குடும்ப தகராறில் மனைவி மற்றும் உறவினர்களை கத்தியால் குத்தியவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஆர்.எஸ்.ரோட்டில் வசித்து வருபவர் தஸ்தகீர் மகன் ஹாஜா மைதீன்(36). இவரது மனைவி மரியம் பீவி(36). இவருக்கும் மனைவியின் சகோதரி நவாஸ் மனைவி ரம்ஜான் பீவி(42) மற்றும் மைத்துனர் சாகுல் ஹமீது மகன் ஜாஃபர் அலி (40) ஆகியோருக்கும் இடையே குடும்ப தகராறு இருந்து வருகிறதாம். இந்நிலையில் நேற்று குடி போதையில் வீட்டிற்கு வந்த ஹாஜா மைதீன், உறவினர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது அங்கிருந்த கத்தியை எடுத்து மனைவி, அவரது சகோதரி மற்றும் மைத்துனர் மூவரை சராமாரியாக கத்தியால் குத்தி காயப்படுத்தியுள்ளார். அக்கம்பக்கத்தினரால் மீட்கப்பட்ட காயமடைந்தவர்கள் வையம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். தகவலறிந்து சம்பவஇடத்திற்கு சென்ற வையம்பட்டி போலீஸார் ஹாஜா மைதீனை கைது செய்து காவல்நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மணப்பாறை அருகே குடும்ப தகராறில் பயங்கரம் மனைவி உள்பட 3 பேரை கத்தியால் குத்தியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Payangaram ,Manaparai ,Duvarankurichi ,Vayambatti ,Trichy district ,Dastagir ,Haja ,Vayambatti R.S. Road ,
× RELATED மணப்பாறை அருகே மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு