×

துவரங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு

துவரங்குறிச்சி, மே 17: துவரங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி சடவேலாம்பட்டியைச் சேர்ந்தவர் வெள்ளைச்சாமி மகன் பிச்சன் (34). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன. பிச்சன் துவரங்குறிச்சியில் உள்ள சைக்கிள் உதிரிபாகம் விற்பனை கடையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையின் காரணமாக கடையின் மேல் தளத்தில் தேங்கிய மழைநீரை சுத்தம் செய்ய சென்றார். அப்போது அந்த கட்டிடத்தின் அருகே உயர்மின் அழுத்த மின்சார கம்பிகள் சென்றதை கவனிக்காமல் ஈர சாக்குகளை அள்ளி கீழே போடும்போது, மின்கம்பியில் சாக்குபட்டு சம்பவ இடத்திலேயே பிச்சன் பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் பிச்சனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

The post துவரங்குறிச்சியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Dwarankurichi ,Dwarangurichi ,Pichan ,Veledichami ,Dwarangurichi Sadavelampatti ,Trichy district ,Bichan Dwarangurichi ,Dinakaran ,
× RELATED துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையம் இடமாற்றம்