×

ஒயின்ஷாப்பில் தகராறு அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ்

திருச்சி, மே 17:திருச்சியில் ஒயின்ஷாப்பில் ஏற்பட்ட தகராறில் அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சியில் கடந்த ஏப்.21ம் தேதி இரவு சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள ஒயின்ஷாப்பில் மது அருந்த சென்றவரிடம் தகராறு செய்து, பணத்தை பறித்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றவா்களை பிடிக்க முயன்றவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து பெறப்பட்ட புகாரின் போில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், சம்பவத்தில் ஈடுப்பட்ட சிந்தாமணி வென்னீஸ் தெருவை சேர்ந்த ரவுடி அபிஷேக் (20) மற்றும் 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், அபிஷேக் மீது ரங்கம் காவல்நிலைய எல்லையில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 7 வழக்குகள் நிலுவையில் இருப்பது தொியவந்தது.

எனவே, அபிஷேக்கின் தொடா் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு கோட்டை இன்ஸ்பெக்டர் அளித்த அறிக்கையினை பாிசீலனை செய்து, மாநகர போலீஸ் கமிஷனர் காமினி குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து திருச்சி மத்திய சிறையிலுள்ள அபிஷேக் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்ட ஆணையினை சார்பு செய்து சிறையில் அடைத்தனர்.

The post ஒயின்ஷாப்பில் தகராறு அரிவாளால் வெட்டி பணம் பறித்த ரவுடி மீது குண்டாஸ் appeared first on Dinakaran.

Tags : Trichy ,Chatram Bus Stand ,
× RELATED பாஜவில் ரவுடிகளை சேர்த்ததாக அண்ணாமலை...