×

சிறையில் உள்ள ஆயுள் கைதியை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார்

விழுப்புரம், மார்ச். 5: விழுப்புரத்தில் திமுக பிரமுகர் செல்வராஜ் கடந்த 2017ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த கொலைக்கு, கடலூர் மத்திய சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனை கைதியான, விழுப்புரம் கல்லூரி சாலையை சேர்ந்த பிரபல ரவுடி இருசப்பன் சதித்திட்டம் தீட்டி கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த வழக்கில் இருசப்பனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கின் விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வந்தது. இதற்காக கடலூர் மத்திய சிறையில் இருந்து விழுப்புரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு இருசப்பனை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். பின், விசாரணை முடிவடைந்து, மாஜிஸ்திரேட் அருண்குமார் உத்தரவின் பேரில், இருசப்பனை விழுப்புரம் நீதிமன்றத்தில் இருந்து அழைத்து சென்று, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார். ரவுடி இருசப்பன் ஆஜராவதை யொட்டி, விழுப்புரம் நீதிமன்றத்தில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

Tags : court ,
× RELATED அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம்...